நல்லதமிழில் எழுதவேண்டுமா? -2
பருகையும் பருக்கையும்
------------------------
பருகை, பருக்கை ஆகியன விரண்டும் தன்வினையும்
பிறவினையுமாக எடுத்துக்காட்டப்படவில்லை.பருகை என்பதற்குப் பருகல் என்பது பொருள். பருக்கை என்பது சோற்றுப் பருக்கையைக் குறிக்கும். கஞ்சி, கூழ் போன்றன பருகத்தக்கன. சோற்றுப் பருக்கைகளாலாகிய உண்டி உண்ணத் தக்கதும் தின்னத் தக்கதும் ஆகும்.
சும்மா சும்மா கிடைக்குமா அம்மாசிப் பருக்கை என்பது கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படும் பழமொழி. மக்கள் சிலருக்குப் பருக்கைச் சோறு அமாவாசை [காருவா] யன்று மட்டுமே கிடைக்கும். பிற நாள்களிலெல்லாம் கஞ்சியோ கூழோதான் உண்ண வேண்டும். அதுவேயும் வயிறாரவும் எல்லா வேளைகளுக்கும் கிடைக்குமா என்பது அய்யமே.
கருத்துகள்
கருத்துரையிடுக