பெண்ணே
குற்றம் அறுப்பவரென்றே வந்தார் குற்றம் கூற்றம் ஆனாரென்றே அறிவிக்கும் ஏடால் முற்றும் குமுகமதனை நினைத்தே குமுறுகிறேன்! பெற்ற அவளைப் பேதை யொருவன் உற்ற அன்பினையே உதறித் தள்ளி கூற்ற வடிவெய்தி குடிகெடுத்தான் மாற்றமிதனை எப்படி ஏற்பார் இங்கெவரும்? உடன்பிறந்தாள் உயிர்வதையுற் றீன்றெடுத்தாள் மடமுணர்ந்து மார்புநோக்கும் விடமனத்தார் வருவார் உடன்பிறப்பென்று உடன் படிக்கையில் பயில்கையில் பயணிக்கையில் அண்ணென்றே தம்பியென்ற என்றினைத்து எவரொருவரையும் எடுத்தவுடன் ஏற்காதே! பழகும் நிலையில் தோழமை என்றெண்ணாதே! உழவும் எவர்சொல் எதனையும் ஏற்காதே! இளகும் உன்னிதயம் இடக்குறிப்பு அறிந்துன் நம்பிக்கை வதைபடும் நிலை வரலாம்! நம்பிக் கை வைக்க -ஆசி வைக்கும் தும்பிக்கையிலும் விடம் வரலாம்! வதையும் முன் வாடாதே! வாடா மலரேனும் ஓடாதே! கூடா நட்பெதும் கூடும்முன் தெரியாதே! பல்லிலா பாம்பிடமும் பாசமெதிர் பாராதே! புல்லெனவே மிதிபடும் மழலைகளைப் பாராயோ! சொல்லொண்ணாத் துயரதை ஒருகணமும் உணராயோ! அல்லாத வேலையெல்லாம் அரங்கேறுது நாட்டகத்தில் இல்லாத ஒன்றுகருதி உக்கார்ந்திருக்கோம் நாடகத்தில். வதைபடலம் வலிபடலம...