மகளே
மகளே நீ ஒருநாள்!
மலர்ப் படுக்கை வேண்டுமென்றாய்!
என் மார்புப் படுக்கை நான் நீட்ட
மரகதப்பூவாய் தூயில்கொண்டாய்!
மகளே! நீ ஒருநாள்!
உன் தாய் மடி தேடிச் சென்றாய்!
பூமகள்தான் சுமக்கிறாளென்று
நான் ஆற்றி காத்திருந்தேன்!
மகளே நீ ஒருநாள்!
நிலமகள் நாடிச் சொன்றாய்!
பூப்பாதம் நோகுமென்று
நானிருகை பிடித்துத்தூக்கி மெதுநடந்தேன்
மகளே நீ ஒருநாள்
நாமகள்
வேணுமென்றாய்!
நோ மகளே என்றாது...
ஓடிப் போய்ச் சேர்ந்து வந்தேன்.
மகளே நீ ஒருநாள்!
கோமகன் கூட துணையென்று அழைத்து வந்தாய்! படிப்பிற்குப் பரிசென்றாய்!
உன் துணை நீதேட மகிழ்ச்சி கொண்டு
ஏற்று நின்றேன்.
உன் போல் இரு பூ எனக்கொருநாள்
ஈன்று கொடுத்தாய்!
உனைச்சுமந்த மார்ப்புக் கட்டில்
மீண்டும் சுமக்க ஏன் மறுத்தாய்?
விதையெனப் பாவிவைத்தேன்.
நாற்றென நிற்பேனென்றாய்!
கதை ஒன்று சொன்னவர் பின்தான்
காற்றென ஓடிச் சென்றாய்!
மகளே நீ ஒருநாள்!.
மாற்றுத் தோட்டம் ஏன் சென்றாய்!
உன் கதிர் முளைத்த நாற்றுக்கூட...
நாளை வேறுகளம் செல்லலாமே!
மகளே நீ ஒருநாள்!
அந்த நிலை அடைந்துவிட்டால்
எந்த ஒன்றும் சொல்லாதே! எதிர்ப்பு ஒன்றும் காட்டாதே!
மகளே நீ ஒருநாள்!
வந்து காட்சி கண்டிருக்கலாம்!
மகளே உன் பூக்களை மீண்டுமொருமுறை
நான் சுமந்திருக்கலாம்.
- கரிசல்பாலா
கருத்துகள்
கருத்துரையிடுக