மனையடி - புதினம்

 
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 
புதிய வெளியீடான திரு இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்களின் பனையடி நாவல் புதிய நூல் 
வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது

பனையடி -நாவல் 
இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் அவர்கள் 

எழுத்து என்ன செய்து விட முடியும்?
புனைவு கதை என்ன மாற்றத்தை செய்து விட முடியும்?
என்று கேள்விகளை கூட முன்வைக்க தேவையில்லை.
இரண்டரை மணி நேர திரைப்படம் கொடுக்கும் பாதிப்புக்களை விளைவுகளை விட ஒரு புத்தகம் சமூக மாற்றத்திற்கான விதைகளை சிறப்புறத் தூவி செல்லும்.

இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரி இரா. செல்வம் அவர்கள் எழுதிய இந்நூல் நம் தமிழ் சமூகத்து வேளான் மக்களின் துயர்களை காத்திரமாக பதிவு செய்து சமூக பிரக்ஞை கொண்ட நூலாக எழுதப்பட்டிருக்கிறது.

மக்களின் கதைகள்,சமூக எதார்த்தங்கள் நிரம்பிய தன்வரலாற்று புதினமே "பனையடி"நாவல் 

எளிய வேளான் குடும்பத்தில் பிறந்த இளைஞனின் வாழ்வில் நிகழ்ந்த கடுமையான தடைகளையும், 
ஒரு தந்தையின் தலைமுறை கடந்த  பெருங்கனவும் நிறைந்த காவியம் இந்நாவல்.

சாமான்ய இளைஞனின் எதார்த்த வாழ்க்கையில்,
எளிய பின்புலத்தில் இருந்து சென்று மேடேறி வாழ முற்படுவதில் இத்தனை போராட்டங்கள் எதிர்கொள்ள வேண்டுமா? என்கிற கேள்வியை நாம் கேட்குமளவிற்கு  இங்கே இருக்கின்ற சமூகத்தின் எதிர்மறை தன்மைகளை கலைத்து போட்டு அப்படியே முகத்தினில் அறைவது போலே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் இரா.செல்வம் அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்.
மாநில,ஒன்றிய அரசின் பல துறைகளில் 
முத்திரை பதித்து தேசிய விருது வென்ற மிக சிறந்த நிர்வாக தலைமை பண்புநலன்களை கொண்டவர்.
விலை ரூபாய் 200 / மட்டுமே...

நூல் தொடர்புக்கு:


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்