பெண்ணே
குற்றம் அறுப்பவரென்றே வந்தார் குற்றம்
கூற்றம் ஆனாரென்றே அறிவிக்கும் ஏடால்
முற்றும் குமுகமதனை நினைத்தே குமுறுகிறேன்!
பெற்ற அவளைப் பேதை யொருவன்
உற்ற அன்பினையே உதறித் தள்ளி
கூற்ற வடிவெய்தி குடிகெடுத்தான்
மாற்றமிதனை எப்படி ஏற்பார் இங்கெவரும்?
உடன்பிறந்தாள் உயிர்வதையுற் றீன்றெடுத்தாள்
மடமுணர்ந்து மார்புநோக்கும் விடமனத்தார்
வருவார் உடன்பிறப்பென்று உடன் படிக்கையில் பயில்கையில் பயணிக்கையில்
அண்ணென்றே தம்பியென்ற என்றினைத்து எவரொருவரையும் எடுத்தவுடன் ஏற்காதே!
பழகும் நிலையில் தோழமை என்றெண்ணாதே!
உழவும் எவர்சொல் எதனையும் ஏற்காதே!
இளகும் உன்னிதயம்
இடக்குறிப்பு அறிந்துன்
நம்பிக்கை
வதைபடும்
நிலை வரலாம்!
நம்பிக் கை வைக்க -ஆசி வைக்கும்
தும்பிக்கையிலும் விடம் வரலாம்!
வதையும் முன் வாடாதே!
வாடா மலரேனும் ஓடாதே!
கூடா நட்பெதும் கூடும்முன் தெரியாதே!
பல்லிலா பாம்பிடமும் பாசமெதிர் பாராதே!
புல்லெனவே மிதிபடும் மழலைகளைப் பாராயோ!
சொல்லொண்ணாத் துயரதை ஒருகணமும் உணராயோ!
அல்லாத வேலையெல்லாம் அரங்கேறுது நாட்டகத்தில்
இல்லாத ஒன்றுகருதி உக்கார்ந்திருக்கோம் நாடகத்தில்.
வதைபடலம் வலிபடலம்
வாலியில்லை இராமனில்லை.
சிதைபடலமாய் நீண்டிருக்கு
சீதைகளின் வாழ்வுதாமே!
தூசுபடும் நிலை எய்தி நிலம்தன்னில் தோய்ந்து நிற்கும்
மாசுபடா இராமன்கள் இதிகாச ஏட்டில் தானோ?
கல்லைப்போல கன்னி கருதி கண்டவரும் கரமெடுக்க - சூழ்ந்தது
கல்லிருந்து மீண்டெழா கன்னிகையின் சாபம் தானோ!
எல்லையில்லா இந்நெடுந்துயர் நீள்கிறதே காலம் யாவும்!
இல்லை என்றுரைக்க இங்கெங்கு உளரோ எவர்?
சிற்றறிவுக் கெட்டிய சிறியேன் நானொன்று சொல்லலாமோ!
எட்டுமறிக்கு இழைப்பில்லா
எந்தன் இளைய குரல் கேட்பிரோ!
உற்றதைச் சொல்லி வந்தேன் இனி
உள்ளதைச் சொல்ல வந்தேன்.
மெல்லதைக் கேட்டு மனமதில் ஏற்றுவீரே!
குணமிகு கொண்டோரை நல்லார் என்று சொல்வாரே!
குணம் குறை கொண்டவர்தாம் பொல்லார் ஆகி நிற்பாரே!
எவரொருவர் எங்ஙனுமும் நல்லாரில்லை தீயோரில்லை.
முள்பாயும் பேதைசீலை
வரும்வரைக் கேட்பாரில்லை.
எள் பாய்ந்து வீழும் வரை எண்ணெயில்லை நாக்குயில்லை.
தீநாக்கு ஊர் நாக்குத்
தீண்டும் வரைத் தீமையில்லை.
கொடியவர் சேரா நிலை
தொற்றுவர வாய்ப்பே இல்லை.
நீ ஏறு! நீ ஏறு ! இமயமொத்த பூவாகு!
நீ சேரு! நீ சேரு! நிழல் தரும் மரமாகு!
கருத்துகள்
கருத்துரையிடுக