பிடித்தம், பிடித்தல் - நல்ல உரைநடையில் எழுத வேண்டுமா? மா நன்னன் ஐயா.
பிடித்தம்; பிடித்தல்
-------------------------------
சம்பளப் பிடித்தம் என்பதன்று இப் பிடித்தம்; கைகால் பிடிப்பு என்பதுமன்று இது. விருப்பம் என்னும் சிறப்பு பொருளைத் தரும் இப் பிடித்தம். பிடிக்கும், பிடித்தது, பிடிக்காது, பிடிக்காதது என்பன போன்ற பற்பல வடிவங்களை உடையது. விருப்பத்தினும் விஞ்சியதே பிடித்தம். பிடிப்பது, பிடித்துக் கொள்வது என்பன போன்ற அகப்படுத்திக் கொள்ளல், விடுதலோ விடுபடலோ, விடுவித்துக் கொள்ளலோ எளிதன்று என்னும் கருத்தும் இதன் உள்ளிருந்து எட்டிப் பார்த்தலை நோக்குக.
பிடித்தால் பிள்ளையார் மிதித்தால் சாணி; என்றும் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது போல் என்றும் ஆளப்பெறும் பழமொழிகளில் உள்ள பிடித்தல் என்னும் சொல் ஓர் அரிய கலைச் சொல்லாகும்.அக் காலத்தில் சாணி, களிமண் ஆகியவற்றால் பிள்ளையார் வடிவைப் படைப்போர் அம மூலப் பொருள்களைக் கொண்டு பிள்ளையார் எனும் வடிவை அமைத்தலைப் பிடித்தல் எ ன்றே உரைத் துள்ளமை அறிக. தட்டாமால், உருட்டாமல், பிடி பிடியாகப் பிடித்தே அதனைப் படைத்துள்ளனர் எனத் தெரிகிறது. இன்றும் அம முறை உள்ளது. மாறத் தொடங்கிய அது நகர்ப் புறங்களில் முற்றிலும் மாறியே விட்டது என்றும் கூறலாம்.
பதிவிடுபவர் வேண்மாள்
கருத்துகள்
கருத்துரையிடுக