பெண்ணியம் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்

பெண்ணியம்
---------------------
ஆண்மை என்னும் சொல்லுக்குரிய பெண்பாற் சொல்லாகக் கூறப்படும் பெண்மை என்னும் சொல் சலிப்புத் தருவதாலோ புதுமை வேட்கையாலோ பெண்ணியம் என்பது இக்கால நூலோர் பலரால் ஆளப்படுகிறது. பெண்மையில் இல்லாத எச் சிறப்பு பெண்ணியம் என்பதில் இருக்கிறதென்று தெரியவில்லை. பெண்மை பெண்ணியமென்றால் ஆண்மை ஆணியமாக வேண்டாவா? ஆண்மைக்கு ஈடானதும் அதற்கு துணையாவதும் அதனினின்றும் வேறுபட்டதும் [மாறுபட்டதன்று] ஆகிய பல்வேறு சிறப்புக் கூறுகளையும் தன்னுள் கொண்டுள்ள பெண்மைக்குத் திரைபோட்டு மறைத்து விட்டுப் பெண்ணியத்தைத் தேடிப் போகவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதென்பது தெரியவில்லை.

பதிவிடுபவர் வேண்மாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்