பிள்ளையா குட்டியா? நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்

பிள்ளையா குட்டியா ?
------------------------------------
இத் தொடர்மொழி பலராலும் நன்கறிந்து ஆளப்படுவதாகும். அவருக்கென்ன பிள்ளையா குட்டியா? அதனாற்றான் அப்படி வாழ்கிறார் என்று பொதுவாக எங்கும் பேசப்படுவதுண்டு. இங்கு எங்கும் என்பது தமிழ் கூறும் நல்லுலகையே குறிக்கும்.மகப்பேறில்லாதோரைக் குறிக்கவே இத்தொடர் மொழி ஆளப்படுகிறது. பிள்ளை என்பது ஆண் மகவையும் குட்டி என்பது பெண்மகவையும் குறிக்கும். இதற்கு மாறான பொருள் கொள்ளப்படுவது முண்டு. பிள்ளை என்பது பெண்மகவைக் குறிப்பதும் உண்டு. பெண் பிள்ளை எனல் காண்க. சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை எனலும் காண்க. மலையாளத்தில் குட்டி என்பது பொதுவாக மகவையே குறிக்கிறது. குட்டன் என்பது ஆண்பாலாதலின் அதற்கேற்ற பெண்பால் குட்டி தானே? நன்கு எண்ணித் துணிவோமே. 
பதிவிடுபவர் வேண்மாள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்