பேதைமை - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்
பேதைமை
------------------
இச் சொல் பொதுவாக அறியாமை எனப் பொருள் படினும் இந்த அறியாமை அகலக் கூடிய அறியாமையே என அறிதல் வேண்டும். வேப்பங்கன்று வெப்ப மரமாக வளர்வது போல் அன்றி இப் பேதைமை உடையவர் நாளா வட்டத்தில் பேதைமைத் தன்மை அகன்று அறிவு பெற்றவராவார் என்பதே கருத்து. பெண்களின் இளமைப் பருவம் பேதைப் பருவம் எனப்படும். அப் பேதைப் பெண்ணே பின் பெதும்பை, மங்கை, அரிவை, தெரிவை என வளர்ந்து பேரிளம் பெண் என முதிர்ச்சி பெறுவாள்.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக