நற்றிணை
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.
இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம். நற்றிணையில் 7அடி முதல் 13 அடிகள் வரை பாடல் உள்ளன.7 அடி பாடல்கள் - 1
8 அடி பாடல்கள் - 1
9 அடி பாடல்கள் - 106
10 அடி பாடல்கள் - 96
11 அடி பாடல்கள் - 110
12 அடி பாடல்கள் - 77
13 அடி பாடல்கள் - 8
234ஆவது பாடல் கிடைக்கவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக