பண்ணுதல் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்
பண்ணுதல்
------------------
பண்ணுதல் என்னும் சொல்லைச் செய்தல் எனும் பொருளில் ஆள்வது பொருத்த மானதா என எண்ணிப் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது.
" காலை மருதம் பண்ணி" எனும் பகுதியில் உள்ள பண்ணி என்னும் சொல் தரும் பொருளை நோக்குக.
பண்ணமைத்தல், இசைக்கருவிகளை அணிய மாக்குதல், குழம்பு முதலியவற்றைச் சமைத்தல் போல் ஒருவகைச் சிறப்புப் பொருளைத் தரும் சொல்லாகிய அதனைச் செய்தல் எனப் பொதுப் பொருளில் ஆண்டு அதன் சிறப்பைக் குலைக்க வேண்டுமா என எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக