நல்லதமிழில் எழுத வேண்டுமா? புலவர் நன்னன் ஐயா
நுனி, முனை,ஓரம்,ஒட்டு:
---------------------------------------
மேலுள்ளவை போன்ற சொற்கள் யாவும் ஒரே பொருளுள்ளன போல் தோன்றினும் கூர்த்த மதியினருக்கு அவைதம்முள் நிலவும் நுண்ணிய அரிய வேறுபாடு தென்படாமற் போகாது. கீழ்க் காட்டப்படும் நுட்பங்களை ஆதாரங்களாகக் கொண்டு எண்ணிப் பார்த்து அவற்றின் அரும் பொருள் நுட்ப வகைகள் உணர்ந் தின்புறத் தக்கன.
நுனி = விரல் நுனி, நுனிக் கொம்பர், நுனிக் கிளை.
முனை = ஈட்டி முனை, கத்தி முனை, தெரு முனை.
ஓரம் = தெரு ஓரம், சாலை ஓரம், வரப்போரம்.
ஒட்டு = ஒட்டுத் திண்ணை, ஓட்டில் உட்காராதே.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக