பான்மை - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்
பான்மை
---------------
பால் என்பதனடியாகத் தோன்றியதே பான்மை. பகுப்பு எனப் பொருள் தரும் பால் என்பது வேறு. இஃது அன்னதன்று. மனப்பான்மை என்பது போன்ற சொற்களில் உள்ள பான்மையே இங்கு நம் ஆய்வுக்குரியதாகிறது. ஆண்பால் முதலியன ஆண்தன்மை, பெண்தன்மை, பலரின் தன்மை, ஒன்றன் தன்மை, பலவற்றின் தன்மை எனப் பொருள் தருவனவே. ஆண் தன்மையே ஆண்மை எனப்பட்டுப் பிறகு அதுவே ஆண்பால் எனவும் ஆளப்படுகிறது. பசும்பால், என்பது போன்றனவும் இங்கு கருதத்தக்கனவே. மனப்பால் குடிக்காதே எனவரல் காண்க. மேழி பிடித்து உழும்போது கைக்கு ஏற்படும் இடர் மேழிப் பால் எனப்படுதல் உண்டு. பால் இடப் பொருள் தருதலும் உண்டு. என்பால் இல்லை என்பது அதற்கு எடுத்துக்காட்டாகும். தென்பால் வடபால் என்பன தென் பகுதி வடபகுதி எனலும் இவற்றுளடங்கும்.
வன்பால் முதலியன வலிய பகுப்பு [நிலம்] எனப்படும். துயர்த்தன்மை மிக்க நிலமே பாலை எனப்பட்டது. முல்லையும் குறிஞ்சியும் தம் தன்மை திரிந்து பாலையாகும். திரிந்த தன்மையே பாலையாயிற்று எனல் அறிக.
பதிவிடுபவர் வேண்மாள்
கருத்துகள்
கருத்துரையிடுக