புனல்; புனிறு; புனிதம் _ ல்ல உரைநடை எழுத வேண்டுமா? மா. நன்னன்
புனல்; புனிறு; புனிதம்.
--------------------
புனல் என்ற சொல் ஆங்கிலச் சொல்லின் திரிபன்று.புனல் = நீர்; அப் பெயர் புனல் போன்றவற்றைச் சிந்தாமல் அகப்படுத்தப் பயன்படும் கருவிக்கு ஆகிய பெயர்.
புனிதம் - வட சொல்லன்று; புனிறு என்பதன் திரிபே புனிதம்; புனிறு = ஈன்ற அணிமை;
பிற்கால இலக்கியங்களிலும் காண்டற்கரிய ஓர் அரிய கலைச் சொல்லிது. இதன் பொருள் ஈன்ற அணிமை. புனிறு + ஆ = புனிற்றா என்றால், அப்போது தான் கன்றை ஈன்ற பசு என்பது பொருள். புனிற்றிளம் என்று அவ் விளமை மிகுக்கப்படுவதும் காண்க.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக