பட்டி - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்


பட்டி
--------
பட்டி, பட்டிக்காடு; விருதுப்பட்டி, உலகம்பட்டி என்பனவும் பட்டு, பட்டணம் என்பன போன்று உள்ளன யாவும் பட்டி என்பதன் மறுதோற்றங்களே. பட்டி என்பதும் படு என்பதை அடியாகக் கொண்டதே. ஆட்டுக் கிடை, மாட்டுக்கிடை என்பனவற்றுள் உள்ள கிடை என்பது ஆடுமாடுகளின் கிடந்த திருக்கோலத்தோடு உறவுடையனவே. கிடத்தலே கிடை, அதுபோல் படுத்தலே பட்டு என்றும் பட்டி என்றும் ஆளப்படுகின்றன. மாடு செல்வமானாற் போல் மாட்டுக் கிடையுள்ள இடமே மனிதனின் வாழ்விடமுமாயிற்று. ஆடு மாடுகள் பாதுகாப்பாகக் கிடக்கும் இடமே அதனைச் சுற்றி உண்டான ஊர்களுக்கு மிடமாயிற்று. கோயிலைச் சுற்றி ஊர் உண்டாவதற்கு முன் ஆடு மாடுகளின் கிடைகளைச் சுற்றி உண்டான ஊர்களே பட்டு என்றும் பட்டி என்றும் வழங்கப்படும் ஊர்களாகும்.  
பதிவிடுபவர் வேண்மாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்