மருட்டல் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்
மருட்டல்
--------------
மருட்டல், மிரட்டல், விரட்டல் ஆகிய மூன்று சொற்களும் ஒன்றிலிருந்து ஓன்று பிறந்திருக்கக் கூடும். ஆனால் அவற்றுக் கிடையே நுட்பமான வேறுபாடு [மாறுபாடன்று] இருப்பதாகவும் தெரிகிறது. மக்கள் சொற்களைப் பயன்படுத்தப் பயன்படுத்த அவற்றின் பொருள்களில் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுவதுண்டு. அது பழையன கழிதலும் புதியன புகுதலும் போல் இயல்பாக நடைபெறும். அவ் வளர்ச்சியின் பயனை நாம் இழந்து விடக்கூடாது.
மருட்கை என்பதடியாக மருளல், மருட்டல், மருளுதல், மருட்டுதல் ஆகிய பல சொற்கள் தோன்றியுள்ளன. மறுட்கை என்பதற்குக் காணாதன கண்டு திகைத்தல் என்று பொதுவாகப் பொருள் கூறப்படும். எதிர்பாராதன, கருதப்படாதன போன்றவற்றைக் காண நேரும் போதுஏற்படும் மயக்கங் கலந்த திகைப்பே மருட்கை. மிரட்டல் என்பதற்குப் போலியாக அச்சுறுத்தல் என்றும், விரட்டல் என்பதற்கு துரத்துதல், ஓட்டுதல் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக