கூடுதலும் திரளுதலும் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா? மா. நன்னன்
கூடுதலும் திரளுதலும்:
----------------------
கூடல், திரளல் என்பன ஒரு பொருளனவே ஆயினும் நுண்ணிய வேறுபா டொன்றை அவை தம்முள் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
தத்தம் வீடு முதலியவற்றில் தனித்தனி மாந்தராக இருந்தோர் ஏதேனுமொரு காரணத்துக்காகத் தம் ரஉருத்திரியாமல் ஒன்று கூடலே கூடல். பால் காய்ச்சப்பட்டுத் தயிராக உருப் பெற்ற பின்னரும் தனித்துத் தோன்றாமல் அப் பாலிலும் தயிரிலும் இரண்டறக் கலந்திருந்த வெண்ணெய், கடைதலால் தனித்தன்மையாக வெளிப்பட்டுப் பின் தனி உருவமும் பண்பும் பெற்றுத் திரளலே திரளல்.
திரைத்தல், திரட்டல் என்பன இதனுடன் சேர்த்து ஆய்ந்து ஒற்றுமைக் கண்டின்புறத் தக்கனவே. ஆகவே உடம்பில் தோன்றாதிருந்த அழுக்கைத் தேய்த்து வெளிப்படுத்தித் திரட்டுதலும் அவ்வாறு திரட்டப்பட்ட அழுக்கை உமையம்மை பிள்ளையாராக்கிய கதையும் ஈண்டு எண்ணத்தக்கனவே. ஆகவே திரளலுக்கும் திரட்டலுக்கும் கூடலுக்கும் கூட்டலுக்கும் இடையே உள்ள வேற்றுமை நயம் உணர்ந்து சுவைக்கத் தக்கதாதல் அறிக.
கருத்துகள்
கருத்துரையிடுக