அறியப்படாத தமிழகம் - தொ.ப.

நன்றி : அண்ணன் பூ.கோ.அவர்களுக்கு.

அறியப்படாத தமிழகம் என்கிற தொ.பரமசிவன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். தமிழ்நாட்டின் பல்வேறு சுவையான பக்கங்கள்,பண்பாடு,நம்பிக்கைகள் என்று நீளும் புத்தகத்தை ஒரே மூச்சில் கண்டிப்பாக படித்துவிட முடியும். குளிர்விக்கப்பட்டு நீர் கிடைப்பது குளம்,ஊர் அருந்த இருந்த நீர்நிலை ஊருணி,ஏர்த் தொழிலுக்கு பயன்பட்டது ஏரி என்று வகுத்தவர்கள் நம்மவர்கள். 

எண்ணெய்யை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் பிறகு பகுதி உணவுகள் தமிழகத்தை நோக்கி வந்த சமீப காலத்தில் தான் . உப்பு என்பதில் இருந்தே அறுசுவைகள் எழுந்திருக்கின்றன,சம்பாவும்,அளமும்(உப்பும் ) சேர்த்து தரப்பட்டதே சம்பளம். 

ரவிக்கை என்பது தெலுங்கு பெண்களிடம் இருந்து தமிழகத்துக்கு வந்தது ; கிணறுகளை வீட்டில் தனியாக அமைத்து ஜாதி பாகுபாடு வளர்த்திருக்கிறார்கள் அன்றைய வைதீகர்கள். தாலி என்கிற ஒன்று திருமணத்துக்கு பயன்படுத்தப்படுவதாக ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இல்லை. இடுப்பில் கட்டப்படும் காப்பை ஐம்படைத்தாலி என்றிருக்கிறார்கள். ஆண்டாள் பாடும் பாடல்களிலும் தாலி பற்றிய குறிப்புகள் திருமண சடங்குகளில் இல்லை. அதே போல ஆண்டாள் மதி நிறைந்த நன்னாளில் என்று பாடுவதால் தைப்பூசம் அன்று பாவை நோன்பு முடிந்திருக்கும் என்கிறார் ஆசிரியர். 


தாய்மாமன் என்கிற உறவுக்கு திராவிட மக்களுக்கு உரியது ; வடநாட்டில் அது இல்லை. மணமகனின் சகோதரி மணமகளுக்கு அவன் சார்பாக தாலி கட்டும் வழக்கம் இங்கே இருந்திருக்கிறது. இந்த நாடு வெப்பபிரதேசம் என்பதால் கழிவறைகள் இல்லை ; ஆகவே இங்கே மலம் அள்ளும் ஜாதியினர் இல்லை. தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பதை தீபாவளிக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது வடநாட்டு பழக்கம்,இங்கே இறக்கிற பொழுது தான் தலைக்கு எண்ணெய் தேய்ப்பார்கள் என்று சொல்கிறார் தொ.ப. . கூடவே மகாவீரர் இறந்த தினத்தை நரகாசுரன் இறப்பு தினம் என்று மாற்றியது வைதீகம்.

இஸ்லாமியம் தமிழகத்தில் வாளால் பரவிய மதமன்று. சோனகர்கள் என்று அரேபிய வியாபாரிகள் குறிக்க்கப்படுகிறார்கள். கூடவே கண்ணனுக்கு ராதையை வங்கம் தந்தது போல,இஸ்லாமிய நம்பிக்கை ஒரு பெண் நாயகியை தந்திருக்கிறது. பூவராக கோயில் பெருமானுக்கு அருகில் இருக்கும் பள்ளிவாசலில் இருந்து மாலை போகிற வழக்கம் இருக்கிறது. 

கணவன் இருக்கிற காலத்தில் பெண் கர்ப்பமாக இருந்தால் நீரில் முல்லைப்பூ போட்டு எத்தனை மாத கர்ப்பம் என்று ஊருக்கு உணர்த்தும் வழக்கம் இருக்கிறது இன்னமும். மொட்டை போடுதல்,பட்டிமன்றம் நடத்துதல் எல்லாமும் பவுத்தம் தமிழகத்துக்கு தந்தது. சமண தீர்த்தங்கரர்கள் சிலைகள் தான் இப்பொழுது தவசி அல்லது முனீஸ்வரன் சிலைகள் என்று ஆகி வணங்கப்படுகின்றன. விநாயகர் வழிபாடு ஆறாம் நூற்றாண்டுக்கு பின்னர் இங்கே வந்திருக்கிறது. செட்டியார்களால் அவர் வழிபாடு இங்கே பழக்கத்துக்கு வந்திருக்கும் என்றும் பதிவு செய்கிறார். 

தவிட்டுக்கு பிள்ளை வாங்குதல் பிள்ளையில்லாத குறை தீர்க்க,தத்து எடுப்பது சொத்துக்களை காக்க இரண்டாவது பழக்கம் செட்டியார்கள் மற்றும் பிராமணர்களிடம் இருந்திருக்கிறது. சமணம் தந்ததே பள்ளி என்கிற கருத்தாக்கம். மதுரைப்பகுதி ஆட்சியராக இருந்து மக்களால் பீட்டர் பாண்டியன் என்று நாட்டுப்புற பாடல்களில் கொண்டாடப்படும் அதிகாரியின் ஊழல் கதை சுவாரசியம். கருப்பு தமிழ் இலக்கியங்களில் கொண்டாடப்பட்ட நிறம் ; கடைசி ஐநூறு ஆண்டுகள் வெள்ளைத்தோல் கொண்டவர்கள் ஆண்டதால் வந்த இழிபார்வை இன்றைக்கு இருப்பது 

அறியப்படாத தமிழகம் அறிந்துகொள்ள வேண்டியவை பல கொண்ட நல்ல நூல் 

நூல் விலை : ரூபாய்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு 
பக்கங்கள் : 132
ஆசிரியர் : பேராசிரியர் தொ.பரமசிவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

சுப்ரபாரதிமணியன்

அஞ்சில் அஞ்சியார்