நல்ல உரைநடை எழுத வேண்டுமா?புலவர் மா. நன்னன்
நெட்டாமுட்டி
---------------------
இது தொடர்மொழி யாயினும் ஒருசொல் தன்மைத்தாய் தனிமொழி போலவே கடலூர் மாவட்டத்தில் ஆளப்பட்டது. இதனை நெடுமை + ஆ + முட்டி, நெடு + முட்டி, நெட்டா + முட்டி எனப் பலவகையாகப் பகுத்துப் பார்க்கலாம்.
உருவைக் கண்டு பிடிக்க முடியாதபடி உருக் குலைந்து கிடப்பது இது. இதன் பொருள் பயன்படத் தகுதியற்ற தாயினும் ஒப்புக்குச் சப்பாணி போல் இதை வைத்துக் கொண்டு வினையை எப்படியாவது
முடித்துவிடலாம் என்பதாகும்.
ஆட்டத்தில் ஒப்புக்காகச் சப்பாணி யாக உள்ள ஒருவனைச் சேர்த்துக்கொண்டு ஆடி முடிப்பது போன்றதே இதுவும். இதனை பலரும் உப்புக்குச் சப்பாணி என்பர். ஆனால் அது விளையாட்டுக்கு மட்டுமே ஆளப்படுவது வழக்கம். நெட்டா முட்டி என்பது பலவகையிலும் ஆளப்படுவதாகும்.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக