பணமும் காசும் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்

பணமும் காசும் 
-------------------------
பணமும் காசும் ஆகிய இரண்டும் பணங்காசு என்று தொக்கு நின்று அத் தொகை யாற்றலால் ஒரே பொருளை உணர்த்துவன வாயினும் தனித் தனியாகப் பிரிந்து நின்று தனித்தனிப் பொருள்களை உணர்த்துவனவு மாகும்.

பணம் என்பது வெள்ளியா லானதையும் காசு என்பது பொதுவாகப் பிற உலோகங்களால் ஆனதையும் உணர்த்துவன.

பணம், வெள்ளிப் பணம் என்பன வெண் பொற்காசுகள் என்னும் வழக்காலும் ' வெள்ளைக் காரன் பணம் சின்னப் பணம் அதை வேடிக்கை பார்க்குதாம் வெள்ளிப்பணம்' என்னும் பாட்டாலும் அறியப்படும். வெண் பொற்காசு என்பதன் சுருங்கிய வடிவமே வெள்ளி என அறிக.

இன்றும் பணம் என்பதைக் குறிக்கும் குறியாகக் கொள்ளப்படும் வலக்கை நடுவிரலையோ சுட்டு விரலையோ  கட்டை விரலால் சுண்டிக்காட்டுவது வெள்ளிப் பணத்தை எண்ணும் முறையால் உண்டானதே யாகும்.

காசு என்பது செம்பைக் குறிக்கும். செம்பினால் ஆகிய பானை போன்ற ஏனம் காசாண்டி எனப்படல் காண்க.
பதிவிடுபவர் வேண்மாள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்