பிடி, குத்து, சேரை, சிட்டி - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்.

பிடி, குத்து, சேரை, சிட்டி
------------------------
பிடி என்பது கையால் பிடித்து எடுத்துக் கொடுக்கும் ஓர் அளவுப் பெயராகும். அது வைக்கோல், புல் போன்றவற்றை அளக்கப் பயன்படுவதொரு கலைச் சொல்லாகும். நீ பால் குடிக்கிறாயே அம் மாட்டுக்கு என்றைக்காவது ஒரு பிடி புல் அறுத்துக் கொண்டு வந்து போட்டிருப்பாயா? கன்றுக்குப் போட ஒரு பிடி வைக்கோல் கேட்டேன் என்பன காண்க.

குத்து என்பது ஒருவனைக் குத்தக் கை விரல்களை
மடக்கி மூடிய போதுஅதன் உள் அடங்கியிருப்பதே ஒரு குத்துக் கடலை. இந்த எள்ளைக் குத்துக் குத்தாக அள்ளிவை என்பது காண்க.

குத்து என்பது கை விரல்களை மடக்காமல் சேர்த்து விரித்து உள்ளங்கையைக் குழிப்பதற்குத் தோதாகச் செறித்து வைத்துக் கொண்டால் அது நிறைய அடங்கும் அரிசியே சேரை அரிசி எனப்படுகிறது.
உலையில் போடுவதற்கு சேர அரிசிக்கு வழியில்லை என்பது காண்க.

சிட்டி எனப்படுவது கட்டை விரல் நுனியையும் சுட்டுவிரல் நுனியையும் மட்டும் பயன்படுத்தி எடுக்கப் படும் திருநீறு, காப்பித்தூள், மஞ்சள்தூள் போன்றவை. ஒரு சிட்டி மாவு தா என்பது காண்க.
பதிவிடுபவர் வேண்மாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்