போக்கி - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்
போக்கி
-------------
நெடும் பாதையில் ஒருவர் வண்டியை ஓட்டிச் செல்கிறார். அவர் தமக்கு இடப்புறம் பிரியும் கிளைப்பாதையில் திருப்பி ஓட்டிச் செல்ல வேண்டும். அவர் அவ்வாறு அதனைத் திருப்பி ஓட்ட முயலும் போது அதன் இடப்புறச் சக்கரம் திருப்பு முனையிலிருந்த பள்ளத்தில் இறங்கி விட்டது. அதைக் கண்ட ஒருவர், ' வண்டியோட்டி வண்டியை இன்னும் போக்கித் திருப்பி இருந்தால் இது நேர்ந்திராது. ' என்கிறார். அஃதாவது போக்கி என்றால் இன்னும் சிறிது தொலைவு வண்டியை நேரே போகச் செய்து பின் திருப்பி இருந்தால் இது நேர்ந்திராது என்று அவர் கூறியது மிகமிகச் சரியானதே.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக