பிரெட்ரிக் எங்கெல்சு 200 - புத்தகங்கள்.

பிரெட்ரிக் எங்கெல்சு  "200"
(ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; 
நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 

எங்கெல்சுன்   "200" பிறந்த தினத்தை முன்னிட்டு 
சிறப்புத் தள்ளுபடியில் 

மார்க்ஸ் எங்கல்ஸ் தேர்வு நூல்கள்
மொத்தம் 20 தொகுதிகள் 
மொத்த விலை 5000 /
எமது தேசிய புத்தக கண்காட்சியில் 4000/ மட்டுமே 

#பிரெட்ரிக்எங்கெல்சு
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்

எங்கெல்ஸ்-200:

இவரல்லவோ உண்மை நண்பர்!

“இங்கே நான் தனிப்பட்ட முறையில் ஒரு விளக்கம் தர விரும்புகிறேன். இந்தத் தத்துவம் வகுக்கப்படுவதற்கு நான் ஆற்றியுள்ள பங்கு பற்றி அண்மையில் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். எனவே, இவ்விஷயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒருசில வார்த்தைகள் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. 

மார்க்சுடன் நாற்பது ஆண்டுகளாகக் கூட்டாகப் பணிபுரிந்த காலத்திலும்சரி, அதற்கு முன்பும்சரி, அத்தத்துவத்தின் அடித்தளங்களை அமைப்பதில், அதைவிடக் குறிப்பாக அத்தத்துவத்தை விவரித்து விளக்குவதில் எனக்கு ஓர் அளவுக்குத் தனிப்பங்கிருந்ததை நான் மறுக்க முடியாது. 

ஆனால், அதன் தலையாய அடிப்படைக் கோட்பாடுகளில் மிகப் பெரும்பகுதியும் (குறிப்பாக, பொருளாதாரத் துறையையும் வரலாற்றுத் துறையையும் சேர்ந்தவை அவை), எல்லாவற்றிற்கும் மேலாக, அவற்றைப்பற்றிய இறுதியான, கூரிய வரையறுப்பும் மார்க்சையே சேரும். 

நான் ஆற்றிய பணியை – ஒருவேளை இரண்டு மூன்று தனித்துறைகளில் நான் புரிந்த பணி நீங்கலாக – நான் இல்லாமலே மார்க்ஸ் எளிதாகச் செய்திருப்பார். மார்க்ஸ் சாதித்ததை நான் சாதித்திருக்க மாட்டேன்.

எங்கள் எல்லோரையும்விட மார்க்ஸ் உயரே நின்றார்; வெகுதொலைவிற்குப் பார்த்தார்; மேலும் விரிவான, விரைவான பார்வை பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதை. நாங்கள் எல்லோரும், அதிகபட்சமாகச் சொன்னால், திறமைசாலிகளே. அவரில்லாமல் இந்தத் தத்துவம் இன்றிருப்பதுபோல் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எனவே, அது அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது சரியே!”

லுத்விக் ஃபோயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்’ நூலில் எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு. 

ஆதாரம்: மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்/
தொகுதி 14/என்சிபிஎச் பதிப்பு]

மார்க்ஸ் எங்கல்ஸ் தேர்வு நூல்கள்
மொத்தம் 20 தொகுதிகள் 

மொத்த விலை 5000 /
எமது தேசிய புத்தக கண்காட்சியில் 4000/ மட்டுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்