அரசியல் சாசனதினம் சிறப்புக்கழிவு இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அரசியல் சாசன தினம் -LAW DAY
(நவம்பர் 26)ஐ முன்னிட்டு இன்றைய தினம் 

எமது 35 ஆவது தேசிய புத்தக கண்காட்சியில் 
எமது நிறுவனம் வெளியிட்டுள்ள சட்ட நூல்களை வாசகர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியில் அளிப்பதில் மகிழ்கிறது எமது நிறுவனம் 

" இந்திய அரசியலமைப்புச் சட்டம்"

ஆசிரியர் - புலமை வேங்கடாச்சலம் அவர்கள் 

வழக்கறிஞர்  புலமை வேங்கடாசலம் அவர்கள் புதுமை
மற்றும் தனித்துவம் மிக்கவர். தமிழ் மொழிமேல் தனிப்பற்றுக் கொண்டவர். நீதிமன்றங்களில் முதன் முதலில் தமிழில் வாதாடியவர்.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னர் நீதி
நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்திய மொழிகளில்தானே நடந்துவந்தன என்று கூறி இந்திய மொழிகளை ஆங்கிலம் விழுங்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்.

அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை ஆங்கிலம் புறம்
தள்ளிவிடக்கூடாது என்று தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் சட்ட நூல்களைத் தமிழில் வரைந்துவருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் இந்திய மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார். 

இவர் எழுதிய இந்துத் திருமணச் சட்டம் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின்
முதல் பரிசு கிடைத்துள்ளது. பிற மொழியின் வால்பிடித்து வாழாமல் தமிழ் மகுடம் சூழத் தனிப்பெருமை பெறும் வகையில் 

"The Constitution of India" என்ற நூலை இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற
தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் ஆணிவேர்களான நீதி, சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் பற்றி இந்நூல் கூறுகிறது. மேலும்ஒன்றியமும் அதன் நிலவரையும், குடியுரிமை, அடிப்படை உரிமைகள்,

அரசின் நெறியுறுத்துக் கோட்பாட்டுக் கொள்கை அடிப்படைக் கடமைகள்,குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர்,நாடாளுமன்றம், குடியரசுத் தலைவரின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள்,

ஒன்றிய நீதித்துறை, இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர்,மாநிலங்கள், ஆளுநர், மாநிலச் சட்டமன்றம், ஆளுநரின் சட்டமியற்றும்அதிகாரம், மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள்,

கீழமைநீதிமன்றங்கள், ஒன்றிய மண்டலங்கள், ஊராட்சிகள், நகராட்சிகள், சட்டமியற்றுவது தொடர்பான உறவுகள், சட்டம் இயற்றும்அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், நிருவாகத் தொடர்புகள்
ஆகியவை பற்றிப் பல்வேறு தலைப்புகளில் 
விளக்கம் தருகிறார்.

இது தவிர நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், வழக்குகள், கடன்கள், சொத்துரிமை, அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், தேர்தல்கள்,
அலுவல் மொழி, மாநில மொழிகள், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் இன்னும் பல அமைப்புகள் பற்றிச் சிறந்த முறையில் இந்நூல் விளக்குகிறது.

தமிழர்கள் எளிதில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய பல்வேறு விவரங்களைத் தெரிந்துகொள்ள இந்நூல் ஏற்றது. 
கடின சொல் நடை தவிர்த்து எளிய நடையைக் கையாண்டிருக்கும் புலமை வேங்கடாசலம் அவர்களின் எழுத்து வண்ணம் பாராட்டத்தக்கது.

நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு 
விலை ரூபாய் 320 / மட்டுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்