சுந்தர எழுத்துகள்| மௌனத்தில் விரிந்த மொட்டுகள்|1
மௌனத்தில் விரிந்த மொட்டுக்கள்... - 1
- கரிசல்பாலா.
சுந்தர எழுத்துகள் முதல் பகுதிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
சுந்தர ராமசாமி அவர்கள், ஒரு சிறந்த படைப்பாளர்என்பதை நாம் அறிவோம். அவரது விமர்சனங்கள் மேல்தட்டு இலக்கியப் பார்வையில் மட்டுமே அமையும் என ஒருசாரார் விமர்சித்தாலும்,. ஆரம்ப நிலையில் எழுதப்புகும் இளைஞர்களுக்கு படைப்பு மீதும் தன்மீதும்(படைப்பாளி) பொறுப்புணர்ச்சி வேண்டும் என்பதை இந்தச்செய்தி வழி விளக்குகிறார். இக்காணொளி அவருடைய எழுத்துகளில் ஒரு கூறே தவிர கடைபிடித்தே ஆகவேண்டிய விதிகளல்ல. அவருடைய பார்வையிலான சில விமர்சனங்களே இவை.
கதை எழுதுவோர்! சுவாரஸ்யம் என்பதன் பின்மட்டும் செல்லக்கூடாது. எழுதுவதை பெருமைக்காக செய்யக்கூடாது. அது ஒரு கலை. அதை ரசிக்க வேண்டும். உங்களுக்குள்ளாக இருக்கிற கலை உணர்வை வெளிக்கொணரவேண்டும். அதன் மூலமாக நீங்கள் செல்லும் பாதையில் உங்களின் எண்ணங்களை, சிந்தனைகள், நோக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான கதைக்கருவைத் தேர்வு செய்து, அதில் உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அந்த கலைத்திறனை, அதில் கொஞ்சம் முலாம் போல பூசி வைத்தால் அது சமூகத்தையும் மக்களின் வாழ்வையும் அவலத்தையும் பிரதிபலிக்கும்.
1. சாக்கடை ஓரங்களில் கிடைக்கும் கண்ணாடித்துண்டு - இந்த சமூகத்தில் இருந்து , நாளிதழில் அன்றாடம் வெளிவருகிற சுவாரஸ்யமான செய்திகள்.
2. மூன்றாம் தர படைப்பாளன் - எழுத்தை ஒரு கலையாக பார்க்காமல் வெறுமனே சுவாரஸ்யம் என்பதை மட்டும் சுமந்துகொண்டு கதை என்ற பெயரில் எதையோ எழுதிக்குவிப்பவன். எழுத்தாளன் என்றால் பெருமை கிடைக்கும் என்பதற்காக எழுதுபவன்.
3. ஆன்மாவின் இரசம் - உங்களுக்குள் இருக்கிற தனித்தன்மை. கவிஞனுக்கு கவிதை. கதையாசிரியனுக்கு அவனுக்குள் கிடக்கிற படைப்புத்திறன்; படைக்கும் திறன்.
4. முலாம் பூசப்பட்ட கண்ணாடி - தகவலை மட்டும் சுவாரஸ்யமாக சொல்லும் கதையல்லாமல் தனக்குள் இருக்கிற படைப்பூக்க உணர்வுகளின் வாயிலாக தோன்றின படைப்பு.
5. முகம் - கருவை ஒட்டிய சமூக , மக்கள் நிலை. நோக்கம். வாசகனை சிந்திக்கச் செய்யும் கதைக்கரு.
- தொடரும்...
சிறப்பான தகவல்
பதிலளிநீக்கு